மகளிர் கிரிக்கெட்டை இன்னும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதே குறிக்கோள் - இந்திய வீராங்கனை

மகளிர் கிரிக்கெட்டை இன்னும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதே குறிக்கோள் என இந்திய வீராங்கனை ரேணுகா சிங் தெரிவித்துள்ளார்
திருவனந்தபுரம்,
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டி20 போட்டி இன்று திருவானந்தபுரத்தில் நடைபெற உள்ளது.இந்த போட்டியில் வென்று வெற்றி பயணத்தை தொடர இந்தியா முயற்சிக்கும். அதேவேளை ஆறுதல் வெற்றி பெற இலங்கை அணி தீவிரம் காட்டும்.
இந்த நிலையில், மகளிர்கிரிக்கெட்டை இன்னும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதே குறிக்கோள் என இந்திய வீராங்கனை ரேணுகா சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
‘எனது செயல்பாடு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பெரும்பாலும் என்னால் 4 விக்கெட்டுகள் தான் எடுக்க முடிகிறது. 5 விக்கெட் கைப்பற்றுவதற்கு நான் இன்னும் கடினமாக உழைக்க வேண்டியது அவசியம்
பந்து வீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். வேகப்பந்து வீச்சாளர்களும், சுழற்பந்து வீச்சாளர்களும் நல்ல நிலையில் உள்ளோம். 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்காக சரியான அணி கலவையை கண்டறிய முயற்சிக்கிறோம். பெண்கள் கிரிக்கெட்டை இன்னும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதே எங்களது குறிக்கோள்’ என்றார்.






