இந்த ஆண்டு சிறந்த கேட்சுக்களை பிடிப்பதே எனது இலக்கு - ஹர்திக் பாண்ட்யா

இந்த ஆண்டு சிறந்த கேட்சுக்களை பிடிப்பதே தனது இலக்காக இருக்கும் என்று இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
Image Courtacy: BCCITwitter
Image Courtacy: BCCITwitter
Published on

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக 10 நாட்களுக்கு முன்பே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சென்று விட்டது. நேரடியாக சூப்பர்12 சுற்றில் அடியெடுத்து வைக்கும் இந்திய அணி வருகிற 23-ந்தேதி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணிக்கு இரண்டு (ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக) அதிகாரப்பூர்வ பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது பயிற்சி ஆட்டம் பிரிஸ்பேனில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 186 ரன்களை குவித்தது. கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய போதும், கடைசி 2 ஓவர்களில் மிக மோசமாக விக்கெட்டுகளை பறிகொடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு சிறந்த கேட்ச் எடுப்பதே எனது இலக்காக இருக்கும் என்று இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "கடவுள் என்னிடம் கருணை காட்டியுள்ளார், எனது உடற்தகுதி உயர்ந்துள்ளது. எங்கள் பயிற்சியாளருடன் எனது பீல்டிங்கில் அதிக நேரம் செலவிட முடிகிறது. நான் எப்போதும் ஒரு பீல்டராக இயல்பாகவே இருந்தேன், ஆனால் நான் விதிவிலக்காக இருக்க விரும்புகிறேன். இப்போது , எனது திறமைக்காக சிறிது நேரம் செலவழித்து அந்த கடினமான கேட்சுகளை பெற முடிகிறது.எனக்கு தெரிந்த ஹர்திக், டைவ் செய்து பந்துகளை நிறுத்துவது வழக்கம்.

இந்த ஆண்டு எனது குறிக்கோள் எனது சிறந்த கேட்ச்களில் ஒன்றாக கீழே செல்லக்கூடிய கேட்ச்சைப் பிடிப்பதாகும்" என்று பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் பாண்டியா இவ்வாறு கூறியுள்ளார்.

இந்திய அணி தனது இரண்டாவது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் அக்டோபர் 19 ஆம் தேதி அன்று நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com