சென்னை ரசிகர்களுக்கு குட் நியூஸ்... 22ம் தேதி சேப்பாக்கத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசை விருந்து

'மெகா ரசிகர் நிகழ்வு' என சென்னை அணி நிர்வாகம் நிகழ்ச்சி நடத்துகிறது.
சென்னை ரசிகர்களுக்கு குட் நியூஸ்... 22ம் தேதி சேப்பாக்கத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசை விருந்து
Published on

சென்னை,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு அணி தொடர்பான புதிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், 22ம் தேதி சேப்பாக்கத்தில் 'மெகா ரசிகர் நிகழ்வு' என சென்னை அணி நிர்வாகம் நிகழ்ச்சி நடத்துகிறது.

இந்த நிகழ்ச்சியில், சென்னை அணி முன்னாள் வீரர்களான ரெய்னா, ஹைடன் , முரளி விஜய், பத்ரிநாத் உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். தோனி , ருதுராஜ் உள்ளிட்ட தற்போது உள்ள சென்னை அணி வீரர்களும் கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை 15ம் தேதி தொடங்க உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com