அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக மனோஜ் திவாரி அறிவிப்பு

அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக மனோஜ் திவாரி அறிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான மனோஜ் திவாரி, முதல்தர கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்காக விளையாடி வந்தார். 37 வயதான மனோஜ் திவாரி எல்லா வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.

இந்திய அணிக்காக 12 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உள்பட 287 ரன்கள் எடுத்துள்ளார். மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் ஆடியிருக்கிறார். 2012-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வாகை சூடிய போது அதில் வெற்றிக்குரிய ரன்னை அடித்தவர் இவர் தான்.

முதல்தர கிரிக்கெட்டில் 141 ஆட்டங்களில் ஆடி 29 சதம் உள்பட 9,908 ரன்கள் எடுத்துள்ளார். கிரிக்கெட்டில் விளையாடும் போதே திரிணாமுல் காங்கிரசில் இணைந்த திவாரி தற்போது மேற்கு வங்காளத்தில் விளையாட்டுத்துறை மந்திரியாக பணியாற்றுகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com