

சென்னை,
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி புதிய சாதனை படைத்தது.
ஆமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டிக்குப் பிறகு, அணியின் வீரர்கள் டிரசிங் ரூமில் இந்த வெற்றியை கொண்டாடினர். அப்போது தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வீரர்களுக்கு சில விஷயங்களை தெரிவித்தார்.
இதனை கேப்டன் சூர்யகுமார் யாதவ் தற்போது வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், “இதுதான் நமது டிரசிங் ரூமில் மிகவும் முக்கியமான விஷயம். இதைவிட முக்கியமானது எதுவும் இல்லை. இருநாட்டு தொடரில் நூறு போட்டிகள் வென்றாலும் யாரும் அதை நினைவில் வைத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் உலகக் கோப்பை வெற்றி என்றால் அது என்றும் நினைவில் இருக்கும்,” என்று கம்பீர் கூறியதாக சூர்யகுமார் தெரிவித்தார்.