அதிரடியில் மிரட்டிய கிரீன்: கொல்கத்தா அணி 180 ரன்கள் குவிப்பு

கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்களுக்கு ஆட்டமிழ்ந்தது.


அதிரடியில் மிரட்டிய கிரீன்: கொல்கத்தா அணி 180 ரன்கள் குவிப்பு
Published on

அகமதாபாத்,

10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக் கும்25-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட் டன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மல்லுகட்டுகின்றன.

இந்த போட்டிக்கான தாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது.

ரகானே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். டிம் சீபாராட் 19 ரன்களில் வெளியேறினார். ரகுவன்ஷி 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் கொல்கத்தா அணியில் கிரீன் சிறப்பாக விளையாடினார். பொறுப்புடன் விளையாடிய அவர் அரைசதம் அடித்தார். கிரீன் 79ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்களுக்கு ஆட்டமிழ்ந்தது. குஜராத் அணியில் ரபடா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com