மகளிர் பிரீமியர் லீக்: உ.பி.யை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி

டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
காந்தி நகர்,
5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் குஜராத்தின் வதோதராவில் இன்று நடைபெற்ற 14வது லீக் ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய குஜராத் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் சோபி டெவின் அதிகபட்சமாக 50 ரன்கள் குவித்தார். அதேபோல், பெத் மூனி 38 ரன்கள் சேர்த்தார்.
இதனை தொடர்ந்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உ.பி. வாரியர்ஸ் வீராங்கனைகள் குஜராத் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 17.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த உ.பி. 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் லிட்ச்பீல்டு அதிகபட்சமாக 32 ரன்களும், டிரையோன் 30 ரன்களையும் சேர்த்தனர்.
இதன் மூலம் உ.பி. வாரியர்ஸ் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் ஜெயண்ட்ஸ் அபார வெற்றிபெற்றது. குஜராத் தரப்பில் அந்த அணியின் ராஜேஸ்வரி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.






