

ஆமதாபாத்,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரி வில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரி குஜர வில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளை யாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற் றுக்கு முன்னேறும்.
'பிளே-ஆப்' சுற்றை எட்டுவதற்கு 8-9 வெற்றிகள் தேவையாகும். இன்னும் எந்த அணியும் 'பிளே-- ஆப்' சுற்றை உறுதி செய்யவில்லை.
இந்த போட்டி தொடரில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 56-வது லீக் ஆட் டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.
தொடக்கம் முதல் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் குஜராத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. கில் 5 ரன்களும், பட்லர் 7 ரன்களும், நிஷான் சிந்து 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். நிலைத்து விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தனர்.
இதனால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியில் பிரபுல் , ஷகிப் ஹுசைன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.