ஐபிஎல்: குஜராத் - ராஜஸ்தான் இன்று மோதல்

ஐபிஎல் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
ஐபிஎல்: குஜராத் - ராஜஸ்தான் இன்று மோதல்
Published on

அகமதாபாத்,

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதன்படி, மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில், அகமதாபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 9 வது லீக் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன.

நடப்பு ஐபிஎல் தொடரில் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2வது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் 7வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com