'இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தோம்' - முன்னாள் பாக். வீரர் பாசித் அலி

அசாருதீனை அவமதிக்கும் வகையில் ஒருபோது பாகிஸ்தான் அணியினர் நடந்து கொள்ளவில்லை என பாசித் அலி கூறியுள்ளார்.
'இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தோம்' - முன்னாள் பாக். வீரர் பாசித் அலி
Published on

இஸ்லாமாபாத்,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டர் அசாருதீனை அவமதிக்கும் விதமாக ஒருபோது பாகிஸ்தான் அணியினர் நடந்து கொண்டது இல்லை என்று அந்த அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து யூ-டியூப் சேனலில் பேசியுள்ள அவர், போட்டியின் போது எதிரணி ஆட்டக்காரர்களின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் அவர்களை வெறுப்பேற்றும்படி பாகிஸ்தான் அணியினர் தன்னிடம் கூறியதாகவும், சச்சின் டெண்டுல்கர், நவ்ஜோத் சிங் சித்து, ஆஜய் ஜடேஜா, வினோத் காம்ப்ளி உள்ளிட்டோரை வெறுப்பேற்றும்படி தான் நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் கேப்டன் அசாருதீன் மீது பாகிஸ்தான் அணியினர் மிகுந்த மரியாதை கொண்டிருந்ததாகவும், ஒருபோதும் அவரை அவமதிக்கும் வகையில் தாங்கள் நடந்து கொள்ளவில்லை எனவும் பாசித் அலி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com