ஹராரே டெஸ்ட்: வங்காளதேச அணியை வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றி

இன்னிங்ஸ் மற்றும் 85 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது.
ஹராரே டெஸ்ட்: வங்காளதேச அணியை வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றி
Published on
Updated on

ஹராரே,

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

அதன்படி, ஜிம்பாப்வே, வங்காளதேசம் இடையேயான டெஸ்ட் போட்டி ஹராரேயில் நடைபெற்றது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 140 ரன்களில் சுருண்டது. மொமினுல் ஹக் அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்தார்.

ஜிம்பாப்வே அணி சார்பில் நியூமேன் நியாம்ஹுரி 4 விக்கெட்டும், நகரவா, முசாராபானி, பிராட் ஈவான்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 410 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. தொடக்க வீரர் இன்னசென்ட் காலா அபாரமாக விளையாடி சதம் விளாசிய அவர் 140 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, 270 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காளதேச அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

இறுதியில், வங்காளதேச அணி 2வது இன்னிங்சில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 85 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com