அபிஷேக் சர்மாவின் சாதனையை முறியடித்த ஹர்திக் பாண்ட்யா

இந்த சாதனை பட்டியலில் யுவராஜ் சிங் முதலிடத்தில் உள்ளார்.
image courtesy:BCCI
image courtesy:BCCI
Published on

ஆமதாபாத்,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி ஆமதாபாத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 73 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 63 ரன்களும் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் கார்பின் போஷ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது.

இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை வெளுத்து வாங்கிய ஹர்திக் பாண்ட்யா வெறும் 16 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய 2-வது இந்திய வீரர் என்ற அபிஷேக் சர்மாவின் (17 பந்துகள்) சாதனையை அவர் முறியடித்துள்ளார். இந்த சாதனை பட்டியலில் யுவராஜ் சிங் முதலிடத்தில் உள்ளார்.

அந்த பட்டியல்:

1. யுவராஜ் சிங் - 12 பந்துகள்

2. ஹர்திக் பாண்ட்யா - 16 பந்துகள்

3. அபிஷேக் சர்மா - 17 பந்துகள்

4. சூர்யகுமார் யாதவ்/கே.எல்.ராகுல் - 18 பந்துகள்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com