

மும்பை,
ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை - சென்னை அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையிடம் தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் கூறியதாவது.
பவர்பிளேயில், ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழப்பது எப்போதுமே ஒரு கடினமாது. நாங்கள் இலக்கை விரைவாக எட்டிப்பிடித்து இருப்போம். ஆனால் தொடக்கத்திலேயே விக்கெட்டுகள் விழுந்ததால் எங்களால் சமாளிக்க முடியவில்லை. அவர்கள் நன்றாக பேட் செய்து 207 ரன்கள் எடுத்தார்கள். அது அதே ஆடுகளம், அதே மண். நாங்கள் மட்டும் நன்றாக பேட் செய்திருக்க வேண்டும்.
சஞ்சு ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், அவ்வளவுதான். அதே நேரத்தில், அவர்களின் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து வந்து பங்களித்து, அவர்களை ஒரு நல்ல ஸ்கோரை எட்ட வைத்தார்கள். நாங்கள் இதைத் துரத்திப் பிடிக்க, எங்களுக்கு ஒரு நல்ல பவர்பிளே தேவைப்பட்டது, மேலும் ஆட்டத்தின் வேகம் எங்கள் பக்கம் இருந்திருக்க வேண்டும், ஆனால் அது நடக்கவில்லை. தோல்வி குறித்தும் விவாதித்து, முன்னேறி, என்ன செய்ய வேண்டும் என்பதைக் கண்டறிவோம். ”
இவ்வாறு அவர் கூறினார்.