கேப்டன் பதவியில் இருந்து ஹர்திக் பாண்டியா விலக வேண்டும்: இந்திய முன்னாள் வீரர்

ஹர்திக் பாண்டியா கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
கேப்டன் பதவியில் இருந்து ஹர்திக் பாண்டியா  விலக வேண்டும்: இந்திய முன்னாள் வீரர்
Published on

மும்பை,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்ட னான தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணி வலு வாக இருந்தும் சமீப காலமாக தடுமாறுவது குறித்து தனது யுடியுப் சேனலில் பேசியதாவது,

இரு வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. 2 ஆண்டுக்கு முன்பு ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி மகுடம் சூடியது. இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்றுத்தந்த இரு கேப்டன்கள் மும்பை அணியில் வீரர்களாக உள்ளனர். அதேசமயம் உலகக் கோப்பையில் அவர்களது கேப்டன்ஷிப்பில் ஆடிய ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் கேப்டனாக இருக்கிறார். இது சற்று விசித்திரமாக இருக்கிறது.

தனிப்பட்ட முறையில் ஹர்திக் பாண்டியாயை எனக்கு பிடிக்கும். அவர் அற்புதமான ஒரு வீரர். சிறந்த கேப்டனும் கூட. ஹர்திக் பாண்டியா தாமாகவே முன்வந்து, 'நான் கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொள்கிறேன். சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்தட்டும். அவர் உலகக் கோப்பையை வென்று தந்த கேப்டன். அவருக்கு நான் ஆதரவாக இருக்கிறேன்' என்று சொல்ல வேண்டும். பாண்டியாவே முன்வந்து இவ்வாறு கூறினால், எல்லா பிரச்சி னையும் தீர்ந்து விடும். ஹர்திக் பாண்டியா இதை செய்ய வேண்டும்.இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com