சிஎஸ்கேக்கு செல்கிறாரா ஹர்திக் பாண்டியா? - வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரி

ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2026 சீசன் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.
ஹர்திக் பாண்டியா
Published on

மும்பை,

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, 2026 சீசனில் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படத் தவறியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் தோல்வியடைந்த மும்பை, 14 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்து தொடரை நிறைவு செய்தது.

இந்த சீசன் ஹர்திக் பாண்டியாவுக்கும் சவாலான ஒன்றாக அமைந்தது. காயங்கள் மற்றும் பார்ம் அவுட்டால் அவர் கடுமையாக போராடிய நிலையில், சீசன் முடிந்த பிறகு அவர் வேறு அணிக்கு மாறக்கூடும் என்ற தகவல்களும் ஊடகங்களில் வெளியாகின.

இந்நிலையில், ஹர்திக் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் லேப்டாப், நோட்டுப்புத்தகம், பேனா மற்றும் மொபைல் போன் இடம்பெற்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். ஆனால் அதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது அவரது மொபைல் திரையில் காணப்பட்ட '07:07' என்ற நேரமாகும்.

Also Read
ஐபிஎல்: ரூ.34.50 கோடி... 5 வீரர்களை விடுவிக்கும் டெல்லி?
ஹர்திக் பாண்டியா

இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை பகிரத் தொடங்கினர். கிரிக்கெட் ரசிகர்களிடையே '7' என்ற எண், முன்னாள் இந்திய கேப்டன் தோனியுடன் நெருங்கிய தொடர்புடையதாகக் கருதப்படுவதால், ஹர்திக் பாண்டியா இந்த பதிவின் மூலம் சிஎஸ்கே அணிக்கு மாறுவது குறித்த மறைமுகமாக கூறி இருக்கிறார் என சிலர் யூகித்து வருகின்றனர்.

எனினும் இதுகுறித்து ஹர்திக் பாண்டியாவோ அல்லது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகமோ எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com