மெக் லானிங் சாதனையை முறியடித்த ஹர்மன்பிரீத் கவுர்

5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என இந்திய அணி கைப்பற்றியது.
மெக் லானிங் சாதனையை முறியடித்த ஹர்மன்பிரீத் கவுர்
Published on

திருவனந்தபுரம்,

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. .இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து 113 ரன்கள் இலக்குடன் விளையாடிய இந்திய அணி13.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்து  8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என இந்திய அணி கைப்பற்றியது. 

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் சாதனையை ஹர்மன்பிரீத் கவுர் முறியடித்துள்ளார். இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு இது 77வது வெற்றியாக அமைந்தது.இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற கேப்டன் என்ற சாதனையைப் படைத்தார் ஹர்மன்பிரீத். ஏற்கனவே, ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் 76 வெற்றிகள் பெற்று முன்னிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com