மகளிர் கிரிக்கெட்டில் முதல் வீராங்கனை...வரலாறு படைத்த ஹர்மன்பிரீத் கவுர்

ஹர்மன்பிரீத் 2009-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
மகளிர் கிரிக்கெட்டில்  முதல் வீராங்கனை...வரலாறு படைத்த ஹர்மன்பிரீத் கவுர்
Published on

மனுக்கா ஓவல்,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் வரலாறு படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் விளையாடியதன் மூலம், மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய வீராங்கனை என்ற சாதனையை அவர் பெற்றார். இது அவரது 356வது சர்வதேச போட்டியாகும். இதன் மூலம் நியூசிலாந்து முன்னாள் வீராங்கனை சூசி பேட்ஸ் (355) சாதனையை முறியடித்தார்.

இந்த பட்டியலில் ஹர்மன்பிரீத் கவுருக்கு அடுத்ததாக சூசி பேட்ஸ், ஆஸ்திரேலியாவின்எல்லிஸ் பெர்ரி (349), இந்திய முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் (333) மற்றும் இங்கிலாந்து முன்னாள் வீராங்கனை சார்லோட் எட்வர்ட்ஸ் (309) இடம்பிடித்துள்ளனர்.

2009ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஹர்மன்பிரீத் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவங்களிலும் நீண்ட காலமாக இந்தியாவுக்காக விளையாடி வருகிறார். இதுவரை 6 டெஸ்ட், 161 ஒருநாள் மற்றும் 189 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தப் போட்டி அவரது 189வது சர்வதேச டி20 போட்டியாகும்.

Also Read
கிரிக்கெட் மைதானத்தில் தேனீக்கள் கொட்டியதில் நடுவர் உயிரிழப்பு
மகளிர் கிரிக்கெட்டில்  முதல் வீராங்கனை...வரலாறு படைத்த ஹர்மன்பிரீத் கவுர்

அவரது தலைமையில் இந்தியா 2025-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை கைப்பற்றியது. மேலும் சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 தொடரிலும் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய கிரிக்கெட்டிற்கு அளித்த சிறப்பான பங்களிப்பிற்காக அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா தற்போது 1-0 என முன்னிலையில் உள்ளது. சிட்னியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் இந்தியா 19 ரன்கள் வித்த்யாசத்தில் தோலியடைந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com