ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட்: ஹர்மான்பிரீத் கவுர் விலகல் .

காயம் காரணமாக ஒரு நாள் தொடரில் பங்கேற்காமல் இருந்த நிலையில் டெஸ்ட் போட்டியில் இருந்தும் ஹர்மான்ப்ரீட் கவுர் விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட்: ஹர்மான்பிரீத் கவுர் விலகல் .
Published on

ஓவல்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இரு அணிகளுக்கும் இடையேயான ஒரே டெஸ்ட் போட்டி நாளை ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.

இரு அணிகளும் 2006 ஆம் ஆண்டிற்கு பிறகு டெஸ்ட் போட்டியில் நாளை நேருக்கு நேர் களமிறங்குகின்றன. பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்த டெஸ்ட் பிங் பால் போட்டியாக நடைபெறுகிறது.

இந்த நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஹர்மான்பிரீத் கவுர் இந்த போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.

ஏற்கனவே காயம் காரணமாக ஒரு நாள் தொடரில் பங்கேற்காமல் இருந்த நிலையில் டெஸ்ட் போட்டியில் இருந்தும் ஹர்மான்பிரீத் கவுர் விலகியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com