

கராச்சி
டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்று போட்டி ஒன்றில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று விளையாடின.
இதில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக், டி20 உலகக்கோப்பையில் 50 பந்துகளில் (10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள்) சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இங்கிலாந்து அணி 19.1 ஒவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அரையிறுதிக்கும் முன்னேறி உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் வீரரான வாக்கர் யூனிஸ், டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் விளையாட்டை பற்றி பேட்டி ஒன்றில் கூறும்போது, முதல் இன்னிங்சில் தேவையான அளவுக்கு ரன் குவிப்பில் அணி ஈடுபடவில்லை.
இந்த பிட்ச்சில் இன்னும் 15-20 ரன்களாவது எடுத்திருக்க வேண்டும். மொத்தம் 175-180 ரன்கள் என்றால் நன்றாக இருந்திருக்கும் என்றார்.
இதன்பின்னர் 3-வது ஆளாக களம் இறங்கி, தனி ஆளாக நின்று அதிரடியாக விளையாடிய ஹாரி புரூக் பாகிஸ்தானின் வெற்றியை பறித்து கொண்டு சென்று விட்டார். பாகிஸ்தான் அணி நன்றாக பந்து வீசியது. ஷாகீன் சிறப்பாக விளையாடினார்.
ஆனால், சுழற்பந்து வீச்சாளர்களால் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியாமல் போய் விட்டது. இங்கிலாந்தின் கேப்டன் முன்னணியில் நின்று சிறப்பாக விளையாடினார். அரையிறுதிக்கு முன்னேற அவர் தகுதியானவர்கள் என புகழ்ந்து பேசினார்.