

சென்னை,
14-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களுரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி மும்பை அணியை பேட்டிங் செய்யுமாறு பணித்தார்.
இதன்படி முதலில் பேட்டிங்கை துவக்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக கிறிஸ் லின் 35 பந்துகளில் 49 ரன்கள் விளாசினார்.
பந்து வீச்சை பொருத்தவரை ஹர்ஷல் படேல் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து, 160- ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி பேட்டிங் செய்து வருகிறது.