ஐபிஎல் தொடரில் இருந்து ஹர்ஷித் ராணா விலகல்

எதிர்பார்த்த அளவுக்கு அவரது உடல் தகுதியில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
ஐபிஎல் தொடரில் இருந்து ஹர்ஷித் ராணா விலகல்
Published on

கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீசும் ஆல்-ரவுண்டரான ஹர்ஷித் ராணா, 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி தொடருக்கு முன்னதாக நவிமும்பையில் நடந்த தென்ஆப்பி ரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது முழங்காலில் காயம் அடைந்தார். இதனால் 20 ஓவர் உலகக் கோப்பையை தவற விட்ட ஹர்ஷித் ராணாவுக்கு முழங்கால் காயத்துக்கு மும் பையில் ஆபரேஷன் செய்யப்பட்டது. அவர் காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அவரது உடல் தகுதியில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்த சூழலில், 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் ஹர்ஷித் ராணா ஆடுவது சந்தேகம் தான் என்று செய்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், காயம் குணமடையாததால், ஹர்சித் ராணா ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக மாற்று வீரரை கொல்கத்தா அணி இன்னும் அறிவிக்கவில்லை. ஹர்சித் ராணா விளையாடாதது, கொல்கத்தா அணிக்கு பெரிய இழப்பாகும்.

3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஹர்ஷித் ராணா கடந்த 2024-ம் ஆண்டில் 19 விக்கெட்டு கள் வீழ்த்தி அந்த அணி கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ரூ.4 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட அவர் 15 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அங்கம் வகித்த வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபி ஜூர் ரகுமான் நீக்கப்பட்டதற்கு பதிலாக ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளஸ்சிங் முஜரபானி சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com