வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்: முஜிபுர் ரகுமான் சாதனை

ஆப்கானிஸ்தான் சார்பில் முஜிபுர் ரகுமான் 4 விக்கெட்டும், பரூக்கி, ஓமர் சாய் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்: முஜிபுர் ரகுமான் சாதனை
Published on

துபாய்,

ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் துபாயில் நடைபெறுகிறது. இதில் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றது.இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ரசோலி அதிகபட்சமாக 68 ரன்கள் குவித்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் அந்த அணியின் மேத்திவ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீசை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றிபெற்றது. ஆப்கானிஸ்தான் சார்பில் முஜிபுர் ரகுமான் 4 விக்கெட்டும், பரூக்கி, ஓமர் சாய் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்நிலையில் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் முஜிபுர் ரகுமான் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 3-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இவருக்கு முன்பு 2019-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ரஷித்கானும் 2023-ம் ஆண்டில் வங்கதேச அணிக்கு எதிராக கரீம் ஜனட் ஆகியோர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com