'அவரைப் புரிந்துகொள்வது கடினம்'; சி.எஸ்.கே. வீரர் குறித்து குல்தீப் யாதவ் கருத்து

ஐ.பி.எல் தொடரில் சென்னையில் இன்று நடக்கும் போட்டியில் சி.எஸ்.கே. - டெல்லி அணிகள் மோத உள்ளன.
Image Courtesy: @DelhiCapitals
Image Courtesy: @DelhiCapitals
Published on

சென்னை,

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 16 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் பஞ்சாப், டெல்லி, பெங்களூரு, குஜராத் அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன.

இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. அதில் மாலை 3.30 மணிக்கு சென்னையில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சி.எஸ்.கே.வின் நூர் அகமதுவை ஒரு பேட்ஸ்மேன் புரிந்து கொள்வது மிகவும் கடினம் என டெல்லி வீரர் குல்தீப் யாதவ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நூர் அகமது மிகவும் நன்றாக பந்து வீசுகிறார். மேலும், அவர் அனைவரிடமிருந்தும் கற்றுக்கொள்ள முயற்சிக்கும் ஒருவர். லெக் ஸ்பின் பந்துவீச்சு பற்றி நாங்கள் பேசினோம். அவருக்கு நல்ல வேகமும் உள்ளது. எனவே, ஒரு பேட்ஸ்மேன் அவரைப் புரிந்துகொள்வது கடினம்.

குறிப்பாக நீங்கள் சென்னையில் விளையாடும்போது அது மிகவும் கடினம். இப்போது எல்லா அணியிலுமே லெக் ஸ்பின் பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். அது வழக்கமாகிவிட்டது. பேட்ஸ்மேன்களின் மனநிலையை அறிந்தும், என்னுடைய பலத்தை நம்பியும் செயல்படுவதுதான் என்னுடைய பாணி. சரியான லென்ந்த்களில் வீசுவதும், பந்தை சுழலச் செய்வதும்தான் என்னுடைய பலம். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com