டெல்லிக்கு எதிராக வெற்றி பெற இவர்தான் முக்கிய காரணம் - ரஹானே பேட்டி

Image Courtesy: @IPL
டெல்லிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றது.
புதுடெல்லி,
ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 204 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 44 ரன் எடுத்தார். டெல்லி தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து 205 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக டு பிளெஸ்சிஸ் 62 ரன் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் சுனில் நரேன் 3 விக்கெட் வீழ்த்தினார். இந்நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் கொல்கத்தா கேப்டன் ரஹானே அளித்த பேட்டியில் கூறியதாவது,
இந்த போட்டியின் 13வ-து ஓவரில்தான் போட்டி எங்கள் வசம் திரும்பியது. சுனில் நரேன் வீசிய ஓவர்கள் அவர் எடுத்த விக்கெட்டுகள் தான் எங்களை ஆட்டத்திற்குள் கொண்டு வந்தது. 205 ரன்கள் என்கிற இலக்கு இந்த மைதானத்தில் எட்டக்கூடிய ஒன்றுதான். முதல் பாதியில் நாங்கள் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம்.
ஆனால், இரண்டாவது பாதியில் எங்களுடைய பந்து வீச்சாளர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதாலே வெற்றி பெற்றோம். அதிலும் குறிப்பாக சுனில் நரேன் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தார். அவருடைய மிகச்சிறந்த செயல்பாடு எங்கள் அனைவருக்கும் நம்பிக்கையை அளித்தது.
கடந்த பல ஆண்டுகளாகவே எங்களது அணியின் சாம்பியன் பவுலராக அவர் இருந்து வருகிறார். அவரும் வருண் சக்ரவர்த்தியும் எங்கள் அணியில் இருப்பது மிகப்பெரிய பலம். எங்கள் அணி வீரர்கள் மிகக் கடுமையாக உழைக்கின்றனர். ஒரு அணியாக நிச்சயம் நாங்கள் மீண்டும் மிக சிறப்பான செயல்பாட்டை தொடர்ந்து வெளிப்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.






