இவர் கண்டிப்பாக ஆடும் லெவனில் இடம் பெற வேண்டும் - இந்திய அணி வீரரை ஆதரிக்கும் கில்கிறிஸ்ட்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட் இது குறித்து கூறியதாவது ;
Image Courtesy : AFP 
Image Courtesy : AFP 
Published on

இந்திய அணியில் நிலவி வரும் ஒரே விவாதம் எதைப் பற்றி இருக்கிறது என்றால்,ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் இருவரும் ஆடும் லெவனில் தேர்வு செய்ய வேண்டுமா அல்லது யாராவது ஒருவரை தேர்வு செய்ய வேண்டுமா என்ற விவாதம்.

கடந்த ஆசிய கோப்பை போட்டியில் ரிஷப் பண்ட் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தவில்லை.இதனால் வரும் டி20 உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக்கிற்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்டுகிறது.இருப்பினும் அணியில் இடது கை பேட்ஸ்மேன் என்ற வகையில் பண்ட் க்கு அணியில் வாய்ப்பு வழங்கப்டுகிறது.

சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பெற்றிருந்தார்,ரிஷப் பண்ட் க்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.இருவரில் யாரை தேர்வு செய்வது என்று கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அணி நிர்வாகம் குழப்பத்தில் உள்ளது என்றே சொல்லலாம்

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட் இது குறித்து கூறியதாவது ;

ரிஷப் பண்ட் மிகவும் தைரியமான வீரர். அவர் பந்துவீச்சை எதிர்கொள்ளும் விதம்,அவர் கண்டிப்பாக இந்திய அணியில் ஆடும் லெவனில் இடம் பெற வேண்டும் என நினைக்கிறன்.அவர்களால் ஒன்றாக விளையாட முடியும், ஆனால் ரிஷப் பண்ட் கண்டிப்பாக அணியில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

இருவரும் ஒரே அணியில் விளையாடினால் சுவாரஸ்யமாக இருக்கும். அவர்களால் முடியும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் ஒரு அணிக்கு என்ன கொண்டு வருகிறார்கள், தினேஷ் கார்த்திக்கின் பன்முகத்தன்மை, அவரால் மிடில் ஆர்டரில் விளையாடி போட்டியை பினிஷ் செய்ய முடியும் அவர் மிகவும் அருமையான டச் கேமைக் கொண்டுள்ளார்.என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com