உலகக்கோப்பையுடன் விடைபெற்றார் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட், பயிற்சியாளராக தனது கடைசி உலகக்கோப்பை தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
உலகக்கோப்பையுடன் விடைபெற்றார் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்
Published on

பார்படாஸ்,

பரபரப்பாக நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 2-வது முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது. அத்துடன், இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட், உலகக்கோப்பையுடன் தனது பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருந்து வருகிறார். அவரது பதவி காலம் நடந்து முடிந்துள்ள டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்துள்ளது. டிராவிட்டின் பயிற்சியின் கீழ் இந்திய அணி 2023-ம் ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் ஆகியவற்றில் இறுதிப்போட்டியில் தோல்வி கண்டிருந்தது.

இந்த நிலையில் ராகுல் டிராவிட், பயிற்சியாளராக தனது கடைசி உலகக்கோப்பை தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இந்திய அணியின் கேப்டனாகவோ, ஒரு வீரராகவோ உலகக்கோப்பையை கையில் ஏந்தி சாதிக்க முடியாத ராகுல் டிராவிட், ஒரு பயிற்சியாளராக உலகக்கோப்பையை கைகளில் ஏந்தி தனது ஏக்கத்தை தணித்திருக்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com