மகளிர் பிக்பாஷ் லீக் : முதல் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணி வெற்றி.

10.2 வது ஓவரில் சிட்னி சிக்சர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மகளிர் பிக்பாஷ் லீக் : முதல் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணி வெற்றி.
Published on

ஆஸ்திரேலியா

பிக்பாஷ் லீக் ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான 20 ஓவர் கிரிக்கெட் தொடராகும். மகளிர் பிக்பாஷ் லீக்கின் 7 வது சீசன் ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது. இதில் மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ,பிரிஸ்மென் ஹீட்,கோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ் ,சிட்னி தண்டர்ஸ் , அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி சிக்சர்ஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

நேற்று நடந்த முதல் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொரோனா பெருந்தொற்று பரவல் உள்ளிட்ட பிரச்சனைகளால் வீராங்கனைகள் மைதானத்திற்கு வருவதற்கு தாமதம் ஆனது.

இதனால் போட்டி 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது.முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 11 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக அந்த அணியின் எல்லிஸ் விலானி 54 ரன்கள் எடுத்தார். 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி சிக்சர்ஸ் அணி களமிறங்கியது.

அந்த அணியின் தொடக்க வீராங்கனை அலிஷா ஹீலி 27 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் 10.2 வது ஓவரில் சிட்னி சிக்சர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாளை நடைபெறும் இரண்டாவது போட்டியில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியும் கோபர்ட் ஹூரிகேன்ஸ் அணியும் மோதுகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com