ரகானே இந்திய அணியில் இருப்பதே அவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்- கம்பீர் கிண்டல்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் அஜிங்கியா ரகானே கேப்டனாக செயல்படவுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஓய்வில் இருப்பதால் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் அஜிங்கியா ரகானே கேப்டனாக செயல்படவுள்ளார். என்னதான் அவர் கேப்டனாக இருந்தாலும், ஆடும் 11 வீரர்கள் பட்டியலில் அவர் இடம்பெற்றதே பெரிய விஷயம் என்பது போல ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

நாளை மறுநாள் கான்பூரில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டி குறித்து கவுதம் கம்பீர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான், மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாட பரிந்துரைப்பேன். புஜாரா, ஷுப்மன் கில், ரகானே என்று நடுவரிசை இருக்கும். ஆனால் ரகானே தன்னை நிரூபிக்க வேண்டும், வாய்ப்பை சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

ரகானே அணியில் நீடிப்பதே அவர் கேப்டன் என்பதால் தான். இது அவரது அதிர்ஷ்டம். அவரிக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் நிச்சயம் இதை பயன்படுத்திக் கொள்வார் என்றே நம்புகிறேன்.

இங்கிலாந்தில் 4 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 112 ரன்களையே எடுத்தார் ரகானே, லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 61 ரன்களை தைரியமாக நின்று எடுத்தது அந்த டெஸ்ட் போட்டியில் 60 ஒவர்களில் இங்கிலாந்தை சுருட்டி அபார வெற்றி பெற்றதன் முக்கியப் பங்களிப்பாகும். இப்படி வெறும் பங்களிப்பு செய்யும் ரோலில் இருந்து ரகானே ரிட்டையர் ஆவதற்குள் ஒரு பெரிய வீரராகி தன் கரியரை நிறைவு செய்ய வேண்டும் என்பதே அவர் மீதான எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

ரவி சாஸ்திரி எப்படி பேட்டிங் ஆலோசனை வழங்குவார் என்று தெரியாது, ஆனால் ராகுல் டிராவிட் நிச்சயம் ஒரு பெரிய பயிற்சியாளர், அவரை முன் வைத்து ரகானே தன் பேட்டிங் கோளாறுகளையெல்லாம் களைந்து கொள்ள அருமையான வாய்ப்பு கிட்டியுள்ளது. இவருக்கும் புஜாராவுக்கும் இதுவே கடைசி தொடர், இல்லையெனில் ஸ்ரேயஸ் ஐயர் நிச்சயம் உள்ளே வருவார், இன்னும் எத்தனையோ வீரர்கள் காத்திருக்கின்றனர். என்று கவுதம் கம்பீர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com