இந்திய அணியின் கேப்டன் பதவிக்கான கதவை ஹர்திக் பாண்டியா தட்டுகிறார் - சோயிப் அக்தர்

இந்த ஐபிஎல் சீசன் மூலம் ஹர்திக் பாண்டியா தன்னை சிறந்த கேப்டனாகவும் கிரிக்கெட் உலகிற்கு காட்டியுள்ளார்.
Image Courtesy : IPL / BCCI 
Image Courtesy : IPL / BCCI 
Published on

அகமதாபாத்,

ஐபிஎல் இறுதி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. அறிமுக அணியாக களம்கண்டு இந்த சீசனில் முதல் அணியாக பிளே ஆப் மற்றும் இறுதி போட்டிக்குள் குஜராத் அணி நுழைந்தது.

அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி பார்க்கப்படுகிறது. பரபரப்பான சூழ்நிலையிலும் ஹர்திக் பாண்டியா எடுக்கும் முடிவுகள் அணிக்கு பெரும் சாதகமாக அமைகிறது. இந்த ஐபிஎல் சீசன் மூலம் ஹர்திக் பாண்டியா தன்னை சிறந்த கேப்டனாகவும் கிரிக்கெட் உலகிற்கு காட்டியுள்ளார்.

இந்த நிலையில் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் பேசியுள்ளார்.

ஹர்திக் குறித்து அவர் கூறுகையில், " கேப்டனாக ஹர்திக் பாண்டியா தடம் பதிக்கிறார் என்பதே உண்மை. இனி ரோஹித் ஷர்மா எவ்வளவு காலம் கேப்டனாக நீடிப்பார் என்று தெரியவில்லை. ஆனால் ஹர்திக் இந்திய அணியின் கேப்டன் பதவிக்கான கதவை தட்டுகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பது எளிதல்ல. ஹர்திக் தன்னை கேப்டனாக நிரூபித்து இருந்தாலும் அவர் இன்னும் தனது உடற்தகுதி மற்றும் பந்துவீச்சில் கவனம் செலுத்த வேண்டும். ஆல்-ரவுண்டராக அவர் உடல்தகுதியுடன் இருந்தபோது, அவர் இந்திய அணியில் எளிதாக தேர்வானார். ஆனால் அவர் முழு பேட்ஸ்மேனாக மட்டும் இந்திய அணியில் தேர்வாக வாய்ப்பு இல்லை " என அக்தர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com