கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த ஹெட்மயர்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான சிம்ரன் ஹெட்மயர் அதிரடியில் மிரட்டினார்.
கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த ஹெட்மயர்
Published on

மும்பை,

டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறன. அதன்படி, இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் ஜிம்பாப்வே - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான சிம்ரன் ஹெட்மயர் அதிரடியில் மிரட்டினார். அவர் ஹெட்மயர் 19 பந்தில் அரைசதம் விளாசினார். இதன்மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் குறைந்த பந்தில் அரை சதம் விளாசிய வெஸ்ட் இண்டீஸ் வீரரான கிறிஸ் கெயில் சாதனையை ஹெட்மயர் முறியடித்துள்ளார்.

கிறிஸ் கெயில் 20 பந்தில் அரைசதம் அடித்திருந்த நிலையில் இன்று ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஹெட்மயர் 19 பந்தில் அரை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். குறைந்த பந்தில் அரை சதம் விளாசிய வீரர்களில் ஒட்டுமொத்தமாக 8-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த வரிசையில், 12 பந்துகளில் அரைசதமடித்து யுவராஜ் சிங் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com