புதிய சாதனை படைத்த ஹெட்மயர்

அரைசதம் அடித்து ஹெட்மயர் 85 ரன்கள் விளாசினார்.
புதிய சாதனை படைத்த ஹெட்மயர்
Published on

மும்பை,

டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜிம்பாப்வே வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 17.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த போட்டியில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஹெட்மையர் 85 ரன்கள் விளாசினார்.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் வீரரின் அதிவேக அரைசதம் இதுவாகும். முந்தைய சாதனையும் அவர் வசமே இருந்தது. இதே உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்துக்கு எதிராக 22 பந்தில் அரைச தம் அடித்திருந்தார்.

நடப்பு உலகக் கோப்பையில் ஹெட்மயர் இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி 17 சிக்சர் விளாசியுள்ளார். ஒரு உலகக் கோப்பையில் அதிக சிக்சர் அடித்த வரான வெஸ்ட் இண்டீசின் நிகோலஸ் பூரனின் (2024-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 17 சிக்சர்) சாதனையை சமன் செய்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com