ஐ.பி.எல். வரலாற்றில் அதிகபட்ச ரன்கள்... ஆதிக்கம் செலுத்தும் ஐதராபாத்


ஐ.பி.எல். வரலாற்றில் அதிகபட்ச ரன்கள்... ஆதிக்கம் செலுத்தும் ஐதராபாத்
x

image courtesy:PTI

தினத்தந்தி 26 May 2025 1:18 AM IST (Updated: 26 May 2025 1:20 AM IST)
t-max-icont-min-icon

கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் 278 ரன்கள் அடித்தது.

புதுடெல்லி,

ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 68-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கிளாசென் 105 ரன்களும், டிராவிஸ் ஹெட் 76 ரன்களும் குவித்தனர். கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக சுனில் நரைன் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

ஐ.பி.எல். வரலாற்றில் அடிக்கப்பட்ட 3-வது அதிகபட்ச ரன் இதுவாகும். மேலும் ஐ.பி.எல். வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களின் சாதனை பட்டியலில் முதல் 4 இடங்களில் ஐதராபாத் அணியே ஆதிக்கம் செலுத்துகிறது.

அந்த பட்டியல்:

அணி எதிரணி ரன்

ஐதராபாத் - பெங்களூரு - 287

ஐதராபாத் - ராஜஸ்தான் - 286

ஐதராபாத் - கொல்கத்தா - 278

ஐதராபாத் - மும்பை - 277

கொல்கத்தா - டெல்லி - 272

இதையடுத்து 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணி 18.4 ஓவர்கள் மட்டுமே விளையாடிய நிலையில் 168 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஐதராபாத் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

1 More update

Next Story