ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் இமாச்சலபிரதேச அணி 158 ரன்னில் ‘ஆல்-அவுட்’

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் இமாச்சலபிரதேச அணி 158 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் இமாச்சலபிரதேச அணி 158 ரன்னில் ‘ஆல்-அவுட்’
Published on

திண்டுக்கல்,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு-இமாச்சலபிரதேச அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) திண்டுக்கல் நத்தத்தில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இமாச்சலபிரதேச அணி, தமிழக வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 71.4 ஓவர்களில் 158 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. தமிழகம் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆர்.அஸ்வின் 5 விக்கெட்டும், சாய்கிஷோர் 3 விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய தமிழக அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்து இருந்த போது போதிய வெளிச்சம் இல்லாததால் முதல் நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com