ஹிரிடோய் அபார சதம்.. இந்தியாவுக்கு 229 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்காளதேசம்


ஹிரிடோய் அபார சதம்.. இந்தியாவுக்கு 229 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்காளதேசம்
x

இந்திய அணி தரப்பில் முகமது சமி 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

துபாய்,

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பந்து வீசி வருகிறது.

ஆட்டத்தில் முதல் ஓவரை வீசிய முகமது சமி, சவுமியா சர்காரை காலி செய்தார். அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 2-வது ஓவரை வீசிய ஹர்சித் ராணா, கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோவை அவுட்டாக்கினர். சிறிது நேரம் நிலைத்த டான்சித் ஹசன்(25) அக்சரின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கே.எல் ராகுலிடம் பிடிபட்டார்.

மெஹதி ஹசன் மிராஸ், அனுபவ வீரர் முஷ்பிகூர் ரகீமும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்காளதேச அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் திணறினர்.

அந்த சமயத்தில் தவுஹித் ஹிரிடோய் - ஜேக்கர் அலி இருவரும் ஜோடி சேர்ந்தனர். தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி, அணியை சரிவில் இருந்து மீட்டது. இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்து அசத்தியது. நிதானமாக விளையாடி அரைசதம் அடித்த ஜேக்கர் அலி, 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுபுறம் தனது சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹிரிடாய், 114 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் சதமடித்து அசத்தினார். இறுதியில் வங்காளதேச அணி, 49.4 ஓவர்களில் 228 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இந்திய அணி இந்திய அணி தரப்பில் முகமது சமி அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

1 More update

Next Story