கொடூர கார் விபத்து: அறுவை சிகிச்சைக்கு முன் ரிஷப் பண்ட் என்னிடம் கேட்ட முதல் கேள்வி இதுதான் - மருத்துவர் தகவல்


கொடூர கார் விபத்து: அறுவை சிகிச்சைக்கு முன் ரிஷப் பண்ட் என்னிடம் கேட்ட முதல் கேள்வி இதுதான் - மருத்துவர் தகவல்
x

image courtesy:PTI

ரிஷப் பண்ட் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கினார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு இறுதியில் சாலை விபத்தில் சிக்கி பெரிய பாதிப்பை சந்தித்திருந்த ரிஷப் பண்ட் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பினார்.

அந்த வாய்ப்பிலும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவரது இந்த கம்பேக் அனைவரது பார்வையையும் திரும்ப வைக்கும் வகையில் அமைந்தது. அந்த காரணத்தினால் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அவர் இடம்பிடித்து கோப்பையை வெல்ல உதவினார். தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் அசத்தி வருகிறார்.

இந்நிலையில் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கிய பிறகு அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தின்ஷா பர்திவாலா அறுவை சிகிச்சைக்கு முன் ரிஷப் பண்ட் தன்னிடம் கேட்ட முதல் கேள்வி என்ன? என்பது குறித்த சில தகவல்களை பகிர்ந்து உள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அந்த கொடூர விபத்தில் சிக்கி உயிர் தப்பிய ரிஷப் பண்ட் மிகவும் அதிர்ஷ்டசாலி. அறுவை சிகிச்சைக்கு முன் மும்பையில் அவர் என்னை சந்தித்ததும் கேட்ட முதல் கேள்வியே 'மீண்டும் நான் விளையாட முடியுமா? என்பதுதான்" என்று கூறினார்.

1 More update

Next Story