ஓசூர்: சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமியை தொடங்கி வைத்தார் டோனி

ஓசூரில், சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமியை எம்.எஸ். டோனி தொடங்கி வைத்தார்
ஓசூர்: சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமியை தொடங்கி வைத்தார் டோனி
Published on

ஓசூர்,

சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் சார்பில் சென்னை துரைப்பாக்கம் மற்றும் சேலம் வாழப்பாடியில் கடந்த ஏப்ரல் மாதம் கிரிக்கெட் அகாடமிகள் தொடங்கப்பட்டு இளம் வீரர்கள் அங்கு பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் அந்த அகாடமி மேலும் விரிவுப்படுத்தப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் எம்.எஸ்.டோனி குளோபல் பள்ளியில் உள்ள மைதானத்தில் சூப்பர் கிங்ஸ் அகாடமி அமைக்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழா நேற்று நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இதை தொடங்கி வைத்தார்.

அடுத்த ஆண்டு ஜனவரியில் அகாடமி பயன்பாட்டுக்கு வரும். இங்குள்ள மைதானத்தில் மொத்தம் 8 ஆடுகளங்கள் உருவாக்கப்படுகிறது. இதில் பயிற்சி ஆடுகளங்களும் அடங்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com