ஐதராபாத் ஆடுகளம் விளையாடுவதற்கு கடினமானதாக இருந்தது - பேட் கம்மின்ஸ்

ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
Image Courtesy: IPL 
Image Courtesy: IPL 
Published on

ஐதராபாத்,

ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 152 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் தரப்பில் நிதிஷ் ரெட்டி 31 ரன் எடுத்தார். குஜராத் தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து 153 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த குஜராத் அணி 16.4 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 153 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் சுப்மன் கில் 61 ரன் எடுத்தார்.

இந்நிலையில், தொடர்ந்து 4வது தோல்வியை சந்தித்த ஐதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது, ஐதராபாத் ஆடுகளம் இன்று விளையாடுவதற்கு எங்களுக்கு கடினமானதாக இருந்தது. ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தால் நாங்கள் போட்டியில் நிச்சயமாக இருந்திருக்க முடியும்.

மேலும், இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமையவில்லை. பனியின் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்த்தோம், அதுவும் எங்களுக்கு நடைபெறாமல் போனது. இருப்பினும் குஜராத் அணி வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்தார்கள். அவர்களின் வேகப்பந்துவீச்சை விளையாடுவதற்கு மிகவும் கடினமானதாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com