ஒரே ஓவரில் இரண்டு கைகளிலும் பந்துவீசி அசத்திய ஐதராபாத் வீரர் - வீடியோ

Image Courtesy: @IPL
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
கொல்கத்தா,
ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 80 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் வெற்றிக்கு வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா தலா 3 விக்கெட் வீழ்த்தி உதவினர். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது வைபவ் அரோராவுக்கு வழங்கப்பட்டது.
இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணிக்காக இலங்கை வீரர் காமிந்து மெண்டிஸ் களம் இறங்கினார். பேட்டிங் ஆல்ரவுண்டரான அவர் கொல்கத்தா பேட்டிங் செய்த போது 13வது ஓவரை வீசினார். அப்போது கொல்கத்தா தரப்பில் ரகுவன்ஷி (வலது கை ஆட்டக்காரர்) மற்றும் வெங்கடேஷ் ஐயர் (இடது கை ஆட்டக்காரர்) களத்தில் இருந்தனர்.
அந்த ஓவரை வீசிய மெண்டிஸ் ரகுவன்ஷிக்கு இடது கையாலும், வெங்கடேஷ் ஐயருக்கு வலது கையாலும் பந்துவீசி அசத்தினார். இவரது பந்துவீச்சில் அரைசதம் அடித்து அசத்திய ரகுவன்ஷி விக்கெட்டை இழந்தார். இந்த போட்டியில் பேட்டிங்கிலும் அசத்திய காமிந்து மெண்டிஸ் (27 ரன்) ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். ஒரே ஓவரில் இரண்டு கைகளிலும் பந்துவீசி அசத்திய மெண்டிஸின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.






