சென்னை அணிக்கு 195 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஐதராபாத்

சென்னை அணியில் ஓவர்டன் , காம்போஜ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
சென்னை அணிக்கு 195 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஐதராபாத்
Published on

ஐதராபாத்,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற் றுக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் இன்று ஐதரா பாத்தில் நடைபெறும் 27-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்க ளான சென்னை சூப்பர் கிங்ஸ் - ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின் றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் அபிஷேக் சர்மா சென்னை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஹெட் 23 ரன்களும் , இஷான் கிஷான் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 59 ரன்களில் வெளியேறினார்.பின்னர் கிளாசன் அரைசதம் அடித்தார்.

இதனால் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 194ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் ஓவர்டன் , காம்போஜ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com