நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்: கம்பீர் பேட்டி

கடைசி போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது
புதுடெல்லி,
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 85.1 ஓவர்களில் 367 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. இந்திய தரப்பில் முகமது சிராஜ் 5 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாட்டு மண்ணில் ஒரு தொடரின் 5-வது போட்டியில் இந்தியா வெற்றி காண்பது இதுவே முதல் நிகழ்வாகும்.
இந்த நிலையில் , லண்டனில் இருந்து டெல்லி திரும்பிய இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கம்பீர் கூறியதாவது,
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த தொடரில் சிராஜ் புத்திசாலித்தனமாக இருந்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். உண்மையில், அவர் மட்டுமல்ல, முழு அணியும் அற்புதமாக செயல்பட்டிருக்கிறது . கடந்த இரண்டு மாதங்களாக வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். சுப்மான் கில் கேப்டனாக அற்புதமான வேலையைச் செய்திருக்கிறார் . அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு தொடர்ந்து நல்லது செய்வார். என தெரிவித்தார்.






