நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன்: சூர்யகுமார் யாதவ் ஓபன் டாக்

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது.
நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன்: சூர்யகுமார் யாதவ் ஓபன் டாக்
Published on

மும்பை,

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மீண்டும் வரலாறு படைத்தது. இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, 3வது முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது.அந்த போட்டியில் மட்டும் இந்திய அணியில் அக்சர் படேலுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது,

அக்சர் படேல் ஒரு அனுபவம் வாய்ந்த வீரர், ஒரு அணியை வழிநடத்துகிறார். அவர் கோபமா இருந்திருப்பார். நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன். நான் ஒரு தப்பு பண்ணிட்டேன்னு சொன்னேன். அது ஒரு கடினமான உரையாடல். அவர் அதை அப்படியே ஏற்றுக்கொண்டார். என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com