‘அர்ஜூன் ஆட்டத்தை நேரில் பார்க்கமாட்டேன்’ - தெண்டுல்கர்

எந்தவித நெருக்கடியும் இல்லாமல் அர்ஜூன் கிரிக்கெட்டை நேசித்து விளையாட வேண்டும் என்று விரும்புவதாக தெண்டுல்கர் கூறினார்.
‘அர்ஜூன் ஆட்டத்தை நேரில் பார்க்கமாட்டேன்’ - தெண்டுல்கர்
Published on

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கரை ஐ.பி.எல். ஏலத்தில் ரூ.30 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. இடக்கை வேகப்பந்து வீச்சாளரான 22 வயதான அர்ஜூன் உள்ளூர் 20 ஓவர் போட்டியில் மும்பை அணிக்காக 2 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார். மும்பை ரஞ்சி அணியில் இடம் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் மகனின் ஆட்டம் குறித்து தெண்டுல்கர் யுடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் பெற்றோர் தங்களது பிள்ளைகள் விளையாடுவதை நேரில் பார்க்கும் போது அவர்கள் தேவையில்லாத மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். இதை தவிர்க்கவே நான் அர்ஜூன் விளையாடுவதை நேரில் பார்க்கப்போவதில்லை. எந்தவித நெருக்கடியும் இல்லாமல் அர்ஜூன் கிரிக்கெட்டை நேசித்து விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஆட்டம் மீதே அவருக்கு முழு கவனமும் இருக்க வேண்டும். ஒரு வேளை அவரது ஆட்டத்தை நான் நேரில் பார்க்க நேர்ந்தாலும், எங்கோ ஒரு இடத்தில் மறைந்து இருந்து பார்ப்பேன். எனது வருகை பற்றி அவருக்கோ அல்லது அவரது பயிற்சியாளருக்கோ அல்லது வேறு யாருக்கோ தெரியாமல் பார்த்துக் கொள்வேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com