சாய் சுதர்சன் வேணாம்.. பிளேயிங் லெவனில் அவருக்கு வாய்ப்பு கொடுங்கள் - முகமது கைப்

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பமாக உள்ளது.
image courtesy:BCCI
image courtesy:BCCI
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை லீட்சில் தொடங்க உள்ளது. இது 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரின் ஓய்வுக்கு பிறகு இந்தியா விளையாடும் முதல் டெஸ்ட் தொடர் இது என்பதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் 2007-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற நிலையை மாற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இந்த தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. டெஸ்டில் அறிமுகமாகும் அவர் 3-வது வரிசையில் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. கருண் நாயரும் இதற்கான போட்டி வில இருக்கிறார்.

இந்நிலையில் சாய் சுதர்சனுக்கு முன்பாக அபிமன்யு ஈஸ்வரனை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரரான முகமது கைப் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "சாய் சுதர்சனுக்கு முன் அபிமன்யு ஈஸ்வரன் பிளேயிங் லெவனில் இருக்க தகுதியானவர். ஏனெனில் அவர் அந்த இடத்திற்கு தகுதியான ஒரு வீரர். முதல்தர போட்டிகளில் கிட்டத்தட்ட 8,000 ரன்களையும், 27 சதங்களையும் அடித்திருக்கும் அவரது திறனை நாம் மதிக்க வேண்டும். அதேபோன்று இங்கிலாந்தில் இந்தியா ஏ அணிக்காக அதிக ரன்கள் எடுத்த சர்ப்ராஸ் கானை நீக்கியதன் மூலம், தேர்வாளர்கள் தவறு செய்துவிட்டனர். லீட்ஸ் டெஸ்டில் இருந்து ஈஸ்வரனை விலக்கி வைத்து அதே தவறை மீண்டும் செய்யக்கூடாது" என்று பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com