’தோனியை நினைத்து பெருமை கொள்கிறேன்’ - சவுரவ் கங்குலி

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஒரு சிறிய நகரிலிருந்து வந்த தோனி, உலக அளவில் ஒரு லெஜண்ட் ஆக உயர்ந்திருப்பது மிகவும் பெருமைக்குரியது என கங்குலி கூறினார்.
’தோனியை நினைத்து பெருமை கொள்கிறேன்’ - சவுரவ் கங்குலி
Published on

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, மகேந்திர சிங் தோனி குறித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஒரு சிறிய நகரிலிருந்து வந்த தோனி, உலக அளவில் ஒரு லெஜண்ட் ஆக உயர்ந்திருப்பது மிகவும் பெருமைக்குரியது என கங்குலி கூறினார். “தோனி சாதித்திருக்கும்போது, நாமும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை சிறிய நகரங்களில் இருக்கும் இளைஞர்களுக்கு உருவாகிறது,” என அவர் தெரிவித்தார்.

Also Read
சென்னை அணியின் தொடக்க வீரர்கள் யார் ? ருதுராஜ் பதில்
’தோனியை நினைத்து பெருமை கொள்கிறேன்’ - சவுரவ் கங்குலி

மேலும், “நானும் மேற்கு வங்கத்தில் இருந்து வந்தவன் என்பதால், அந்த உணர்வு எனக்கு தெரியும். முன்பு அதிகமான இந்திய வீரர்கள் மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் இருந்துதான் வந்தார்கள். ஆனால் தோனி அந்த மரபை மாற்றினார்,” என்றும் கங்குலி குறிப்பிட்டார்.

தோனியின் பயணம் பல இளைஞர்களுக்கு ஒரு ஊக்கமாக இருப்பதாகவும், இந்திய கிரிக்கெட்டில் அவர் உருவாக்கிய தாக்கம் மிகவும் முக்கியமானது என்றும் பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com