கேப்டன் பொறுப்பை முழுமையாக ஏற்கிறேன்.. ரியான் பராக் பெருமிதம்

ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டனாக ஆல்-ரவுண்டர் ரியான் பராக் நேற்று நியமிக்கப்பட்டார்.
கேப்டன் பொறுப்பை முழுமையாக ஏற்கிறேன்.. ரியான் பராக் பெருமிதம்
Published on

ஜெய்ப்பூர்,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 26-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டி யில் பங்கேற்கும் 10 அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட சஞ்சு சாம்சன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பரஸ்பர ஒப்பந்தம் அடிப்படை யில் விட்டுகொடுக்கப்பட்டார். இதனால் ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது.

இந்த சூழலில், அந்த அணியின் புதிய கேப்டனாக ஆல்-ரவுண்டர் ரியான் பராக் நேற்று நியமிக்கப்பட்டார். இது குறித்து ரியான் பராக் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"ராஜஸ்தான் ராயல்ஸ் எனக்கு வீடு போன்றது. இந்த அணி என்னை நம்பியது, வளர்த்தது, ஒவ்வொரு சீசனிலும் முன்னேறத் தூண்டியது. இப்போது அணியை வழிநடத்துவது மிகவும் சிறப்பானது. இந்த பொறுப்பை முழுமையாக ஏற்கிறேன்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் அசாமை சேர்ந்த 24 வயதான ரியான் பராக், கடந்த சீசனில் சாம்சன் காயத்தால் வெளியில் இருந்த போது 8 ஆட்டங்களுக்கு கேப்டனாக பணியாற்றி னார். 2025-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் ராஜஸ்தான் அணி 4 ஆட்டங்களில் மட் டுமே வெற்றி பெற்று 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com