எனது திறமை மீது நம்பிக்கை இருந்தது: சூர்யவன்ஷி

இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
எனது திறமை மீது நம்பிக்கை இருந்தது:  சூர்யவன்ஷி
Published on


சென்னை,

16-வது யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் நடைபெற்றது. இதில் 5 முறை சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவித்து வலுவான இலக்கை நிர்ணயித்தது.

பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 6-வது முறையாக யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 80 பந்துகளில் 175 ரன் குவித்து சாதனை படைத்தார்.

ஆட்ட நாயகன் விருது பெற்ற சூர்யவன்ஷி கூறியதாவது:-

எனது உணர்வை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. இந்தப் போட்டிக்காக நான் கடந்த 8 மாதங்களாக கடுமையான பயிற்சி மேற்கொண்டேன் ஆட்ட நாயகன் விருதை என்னுடன் பணியாற்றிய ஊழியர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இந்தப்போட்டியில் எங்களுக்கு எந்தவிதமான அழுத்தமும் ஏற்படவில்லை. மற்ற ஆட்டத்தை போலவே இறுதிப்போட்டியை நினைத்தோம். எனது திறமை மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com