’விராட், ரோகித்திடம் இருந்து அதை கற்றுக் கொண்டேன்’ - சஞ்சு சாம்சன்

நேற்று நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் 97 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
’விராட், ரோகித்திடம் இருந்து அதை கற்றுக் கொண்டேன்’ - சஞ்சு சாம்சன்
Published on

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்- பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், விராட், ரோகித் போன்ற சிறந்த வீரர்களின் ஆட்டத்தை பார்த்து பல விஷயங்களை கற்றுக்கொண்டதாக கூறினார்.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ‘சூப்பர் 8’ ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 97 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Also Read
’இங்கிலாந்தை வீழ்த்த ‘கூடுதல் முயற்சி’ அவசியம் - கவுதம் கம்பீர்
’விராட், ரோகித்திடம் இருந்து அதை கற்றுக் கொண்டேன்’ - சஞ்சு சாம்சன்

அதன் பின்னர் அவர் பேசுகையில்,

’கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணியுடன் பயணித்து வருகிறேன். தொடர்ந்து அணியில் ஆடாமல் இருந்தாலும் டக் அவுட்டில் அமர்ந்து விராட், ரோஹித் போன்ற சிறந்த வீரர்களின் ஆட்டத்தை கவனித்து கற்றுக் கொண்டேன். சிறந்த வீரர்கள் எப்படி போட்டியை முடிக்கிறார்கள், ஆட்டத்தை எப்படி சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டனர் என்பதை அறிந்து கொண்டேன். அது களத்தில் மிகவும் உதவியாக இருந்தது. என் வாழ்வின் மிகச்சிறந்த நாட்களில் இதுவும் ஒன்று என நான் நினைக்கிறேன்’ என்றார்.

அடுத்து டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வருகிற 5-ம் தேதி நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com