

இந்த வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (செப்.30 முதல் அக்.3 வரை) பெர்த்தில் நடக்கிறது. இது குறித்து இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா நேற்று அளித்த பேட்டியில், உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஆண்கள் அணியின் பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளை பார்க்கும் போது, ஒரு நாள் நமக்கும் பகல்-இரவு டெஸ்டில் ஆடும் அனுபவம் கிடைக்கும் என்று நினைத்த கூட பார்த்ததில்லை. இப்போது இந்திய பெண்கள் அணி பகல்-இரவு டெஸ்டில் விளையாடப்போகிறது. அதை நினைத்தாலே மனதுக்குள் பரவசமூட்டுகிறது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு இது சிறப்பு வாய்ந்த தருணமாக இருக்கும் என்றார்.