எங்கள் அணி 200 ரன்கள் கடந்தது ஆச்சரியம் அளிக்கிறது; சென்னை கேப்டன் ருதுராஜ்

பெங்களூரு 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 250 ரன்கள் குவித்தது.
எங்கள் அணி 200 ரன்கள் கடந்தது ஆச்சரியம் அளிக்கிறது; சென்னை கேப்டன் ருதுராஜ்
Published on

பெங்களூரு,

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பெங்களூருவில் நடந்த 11வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 250 ரன்கள் குவித்தது.

இதையடுத்து களமிறங்கிய சென்னை 19.4 ஓவரில் 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை 43 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

இந்நிலையில் தோல்விக்குப்பின் சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில், உண்மையில் சொல்லப்போனால் எங்கள் அணி 200 ரன்கள் கடந்தது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. இதற்கு சர்பிராஸ், ஓவர்டன், பிரசாந்த் வீர், துபே ஆகியோருக்கு எனது பாராட்டுகள்’ என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com