

சென்னை,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு சென்னை சேப்பாக்கத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான ஆட்டத் தில் 193 ரன் இலக்கை நோக்கி ஆடிய கொல் கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுக்கு 160 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தொடர்ச்சி யாக 2-வது வெற்றியை பெற்றது.
சென்னை அணி வெற்றி பெற்று வந்தாலும் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட்டின் பார்ம் கவலையளிக்கும் வகையிலே உள்ளது. அவர் 5 இன்னிங்சில் 63 ரன்கள் மட்டும் எடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
எனது பார்ம் குறித்து (5 இன்னிங்சில் 63 ரன்) கேட்கிறீர்கள். மனதளவில் நான் நன்றாக இருப்பதாகவே உணர்கிறேன். ஒரு பெரிய இன்னிங்ஸ் விரைவில் வரும். அதுவரை மற்ற வீரர்கள் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். ஆனால் தேவையான நேரத்தில் நிச்சயம் மிகச்சிறந்த பங்களிப்பை அளிப்பேன்' என்றார்.